UPDATED : நவ 05, 2026 11:44 PM
ADDED : நவ 04, 2026 03:27 PM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: செங்குட்டைப்பாளையம் சுவாமி சித்பவானந்தா பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கிணத்துக்கடவு, செங்குட்டைப்பாளையம் சுவாமி சித்பவானந்தா பள்ளியில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (கோவை) சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், மாவட்ட முன்சீப் கோர்ட் நீதிபதி ஸ்ரீநாத் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில், குழந்தை திருமணம், குழந்தைகள் பாதுகாப்பு, 'குட் டச்' மற்றும் 'பேட் டச்', போதைப் பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவர்களிடையே விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
