UPDATED : நவ 05, 2026 11:44 PM
ADDED : நவ 04, 2026 03:27 PM

அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வி.எஸ்.பி., பொறியியல் கல்லூரியில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடந்தது.
கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தில் உள்ள வி.எஸ்.பி., பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ரோபோக்கள், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சாதனங்கள், டிரோன்கள், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டன.
இத்துடன், பள்ளி மாணவர்களுக்கு ‘டிரோன் ஷோ’ காண்பிக்கப்பட்டது. கல்லூரி தலைவர் பாலுசாமி, துணைத்தலைவர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
