/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரசவித்த தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பிரசவித்த தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 08, 2024 11:14 PM
பொள்ளாச்சி; பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கிய பாதுகாப்பு குறித்து, கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆனைமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆல் தின சில்ரன் அறக்கட்டளை சார்பில், பச்சிளம் கழந்தைகள் பாதுகாப்பு தினம், சேத்துமடை குழந்தைகள் மையத்தில் கொண்டாடப்பட்டது.
சுற்றுப்பகுதி கிராமங்களைச்சேர்ந்த கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் கலந்து கொண்டனர். வட்டார மேற்பார்வையாளர் மீனாட்சி தலைமை வகித்தார்.
அப்போது, தாயின் உடலோடு குழந்தை அரவணைப்பில் இருக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே ஊட்டத்தொடங்க வேண்டும்.
பிறந்த குழந்தை ஒரு நிமிடத்தில், தானே சுவாசிக்கத் தொடங்கவில்லை என்றால், செயற்கை முறையில் சுவாசம் அளிக்க வேண்டும்.
குழந்தை பிறந்து முதல் மணி நேரத்தில், கண் பராமரிப்பு, உயிர்ச்சத்து மற்றும் பரிந்துரைக்கப்பட்டத் தடுப்பு மருந்துகள் கொடுக்க வேண்டும்.
குழந்தை எடை, கர்ப்ப கால வயது, பிறவிக்குறைபாடுகள், நோய்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.
தவிர, ஊட்டச்சத்து கண்காட்சியும் இடம் பெற்றது. அறக்கட்டளை நிர்வாகி சம்பத்குமார், பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சல் தடுப்புக்காக, கொசுவலை வழங்கினார்.
இது போன்ற பல்வேறு அறிவுரைகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டன.