/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் கல்லுாரியில் விழிப்புணர்வு பேரணி
/
ரத்தினம் கல்லுாரியில் விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 16, 2025 11:55 PM

கோவை; ரத்தினம் தொழில்நுட்ப கல்லுாரி என்.எஸ்.எஸ்., கிளப் சார்பில், குழந்தை பருவ புற்றுநோய் மற்றும் சாலை பாதுகாப்பை மையமாக கொண்டு, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. போக்குவரத்து எஸ்.ஐ., இளங்கோ கொடியசைத்து, பேரணியை துவக்கிவைத்தார்.
இப்பேரணியில் பங்கேற்றவர்கள், கல்லுாரி முதல் சிட்கோ ஆர்ச் வரை சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போக்குவரத்து உதவி கமிஷனர் தென்னரசு ஹெல்மெட் பயன்பாடு, வாகனத்தில் செல்லும் போது வேகத்தின் அவசியம், விபத்துக்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கல்லுாரி முதல்வர் கீதா, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.