/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல மகோற்ஸவ விழாவில் அய்யப்பன் சுவாமி ஊர்வலம்
/
மண்டல மகோற்ஸவ விழாவில் அய்யப்பன் சுவாமி ஊர்வலம்
ADDED : டிச 24, 2024 11:23 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அய்யப்பன் கோவிலில், மண்டல மகோற்ஸவ விழாவை முன்னிட்டு, அய்யப்பன் சுவாமி ஊர்வலம் நடந்தது.
மேட்டுப்பாளையம் சிவன்புரத்தில், அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அய்யப்ப சேவா சமிதியின் சார்பில், ஆண்டு விழாவும், மண்டல மகோற்ஸவ விழாவும் நடக்கிறது. இந்த ஆண்டு, கடந்த, 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, அய்யப்பன் சுவாமி ஊர்வலம் நடந்தது. கோவை மாவட்ட ஹிந்து முன்னணி செயலாளர் சதீஷ்குமார், சுவாமி ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பெண்கள் தீபம் ஏந்தியவாறு, செண்டை மேளம் இசைக்க ஊர்வலம் சென்றது. அதன் பின் அய்யப்ப சுவாமி சப்பரம் சென்றது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு பள்ளி வேட்டை, கோவை யாழினி இசைக் குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, அய்யப்ப சேவா சமிதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

