ADDED : டிச 09, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்,: அன்னுார் அய்யப்பன் கோவில் திருவிழாவில், சுவாமி திருவீதி உலா நடந்தது.
அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் மற்றும் நஞ்சுண்ட விநாயகர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, நவ., 14ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 24 நாட்கள் மண்டல பூஜைக்கு பின், நேற்று நிறைவு விழா நடந்தது.
காலையில், 16 திரவியங்களால் அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது.
மாலையில் செண்டை மேளம், ஜமாப், குதிரை மற்றும் யானையுடன் ஐயப்பன் திருவீதி உலா துவங்கியது. எக்சேஞ்ச் ரோடு, கோவை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, மெயின் ரோடு வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. திரளான பக்தர்கள் ஜமாப் இசைக்கேற்றபடி நடனமாடியபடி சென்றனர். புலி வாகனத்தில், அய்யப்பன் அருள்பாலித்தார்.