/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு ஆரத்தி பெருவிழா: வரும் 27ம் தேதி நடக்கிறது
/
ஆழியாறு ஆரத்தி பெருவிழா: வரும் 27ம் தேதி நடக்கிறது
ஆழியாறு ஆரத்தி பெருவிழா: வரும் 27ம் தேதி நடக்கிறது
ஆழியாறு ஆரத்தி பெருவிழா: வரும் 27ம் தேதி நடக்கிறது
ADDED : செப் 24, 2024 11:46 PM
ஆனைமலை : ஆனைமலை அருகே ஆழியாறு ஆரத்தி பெருவிழா வரும், 27ம் தேதி நடக்கிறது.
ஆனைமலை, கோட்டூர் ரோடு ஆர்ஷ வித்யா பீடம் சார்பில், ஆழியாறு ஆரத்தி பெருவிழா வரும், 27ம் தேதி ஆனைமலையில், ஆழியாறு ஆற்றங்கரையில் நடக்கிறது. மாலை, 4:00 முதல் மாலை, 6:00 மணி வரை, வாழ்வாதாரம், சுகாதாரம், பெருமை, கவுரவமாக விளங்கும், நம் ஆழியாறு தாய்க்கு ஆரத்தி பெருவிழா, நன்றி நவிலும் பெருவிழா நடைபெற உள்ளது.
இதில், தமிழகத்தின் குருமஹா சன்னிதானங்கள், ஆதீனகர்தாக்கள், துறவியர், ஆன்மிக பெரியோர் பங்கேற்று ஆழியாற்றுக்கு ஆரத்தி எடுத்து ஆசி வழங்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை, அகிலபாரத சந்நியாசிகள் சங்கம், ஆர்ஷ வித்யா பீடம், மகாத்மா காந்தி ஆசிரமம், விவேகானந்தா அறக்கட்டளை, ஆலம் விழுது அமைப்பினர் செய்து வருகின்றனர்.