ADDED : ஜன 12, 2024 08:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;காந்தையூரில் விவசாய நிலத்திற்குள் புகுந்த பாகுபலி காட்டு யானை 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது.
சிறுமுகை அருகே அடர்ந்த வனப்பகுதியையொட்டி காந்தையூரில் பாகுபலி யானை நேற்று அதிகாலை நுழைந்தது. விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை, 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது.
ஊர்மக்கள், வனத்துறையினர் இணைந்து பாகுபலியை பல மணி நேரம் போராட்டத்திற்கு பின் காட்டிற்குள் விரட்டினர்.