தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போலி நுால்கள் விவகாரம் ‘பபாசி’ விளக்கம்

போலி நுால்கள் விவகாரம் ‘பபாசி’ விளக்கம்

போலி நுால்கள் விவகாரம் ‘பபாசி’ விளக்கம்


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: போலி நுால்கள் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பதிப்பகங் கள், ‘பபாசி’யில் உறுப்பினர்களாக இல்லை என, அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசி, பதிப்பு துறையில் நடக்கும் எந்தவொரு ஒழுக்க நெறி மீறல், சட்டவிரோத செயல் அல்லது தீய நோக்கத்துடனான நடவடிக்கைகளையும் கண்டிக்கிறது.

தற்போது, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பதிப்பகங்கள் மீதான குற்றச்சாட்டுகளை, சங்கம் மிகுந்த கவனத்துடன் அணுகிறது. விசாரணைக்கு உட்பட்டுள்ள பதிப்பகங்களும், முறைகேட்டில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் நபர்களும், எந்த காலகட்டத்திலும் பபாசி சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்ததில்லை.

இத்தகைய பதிப்பகங்களையோ அல்லது அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான செயல்பாடுகளையோ, பபாசி சங்கத்துடன் தொடர்புபடுத்துவது தவறானது, உண்மைக்கு புறம் பானது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us