/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாகுபலி யானை மீண்டும் நடமாட்டம்
/
பாகுபலி யானை மீண்டும் நடமாட்டம்
ADDED : மார் 18, 2025 04:23 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் -ஊட்டி சாலையில் மீண்டும் தர்பூசனி சாப்பிட வந்த பாகுபலி யானையால் பரபரப்பு நிலவியது.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது.
அண்மையில் மேட்டுப்பாளையம் - - ஊட்டி சாலையில் பாகுபலி யானை சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தர்பூசணி கடைக்குள் புகுந்து பழங்களை சாப்பிட்டு, கடையை சேதப்படுத்தியது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மீண்டும் அதே தர்பூசணி கடைக்கு பாகுபலி யானை வந்தது. அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர் யானை விரட்டும் வாகனத்தின் வாயிலாக சைரன் எழுப்பி பாகுபலி யானையை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.