/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு : விலையும் உயர்வால் மகிழ்ச்சி
/
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு : விலையும் உயர்வால் மகிழ்ச்சி
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு : விலையும் உயர்வால் மகிழ்ச்சி
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு : விலையும் உயர்வால் மகிழ்ச்சி
ADDED : அக் 16, 2025 08:38 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலையும் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யும் வாழைத்தாரை, கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
மார்க்கெட்டில், செவ்வாழை கிலோ - 70, நேந்திரன் --- 30, ரஸ்தாளி --- 42, பூவன் --- 37, கதளி --- 30, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும், செவ்வாழை, நேந்திரன், கதளி, சாம்பிராணி ஆகிய வாழைத்தார்கள் கிலோவுக்கு, 5 ரூபாயும்; ரஸ்தாளி மற்றும் பூவன் வாழைதார்கள் கிலோவுக்கு 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில், வாழைத்தார்கள் உள்ளூர் வரத்து இருந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து இல்லை. கடந்த வாரத்தை காட்டிலும் வரத்து அதிகரித்துள்ளது, விலையும் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,' என்றனர்.