/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மகளிர் பள்ளியில் வாழை இலை விருந்து: விருந்தோம்பலை விளக்கும் நிகழ்ச்சி
/
அரசு மகளிர் பள்ளியில் வாழை இலை விருந்து: விருந்தோம்பலை விளக்கும் நிகழ்ச்சி
அரசு மகளிர் பள்ளியில் வாழை இலை விருந்து: விருந்தோம்பலை விளக்கும் நிகழ்ச்சி
அரசு மகளிர் பள்ளியில் வாழை இலை விருந்து: விருந்தோம்பலை விளக்கும் நிகழ்ச்சி
ADDED : ஆக 13, 2025 07:37 PM

ஆனைமலை:
ஆனைமலை அருகே, கோட்டூர் மலையாண்டிபட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 'வாழை இலை விருந்து விழா' நடந்தது.
ஆனைமலை அருகே, கோட்டூர் மலையாண்டிபட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், மூன்றாவது இயல், 'விருந்து போற்றுதல்' என்ற தலைப்பில் உள்ளது.
இது குறித்து விளக்கும் வகையில், 'வாழை இலை விருந்து விழா' நடந்தது. தலைமையாசிரியர் ரோஸ்லின் கலைச்செல்வி தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் சிவக்குமார், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தமிழ் ஆசிரியர் உமா, வாழை இலை விருந்து விழா ஏற்பாடு செய்தார்.
ஆசிரியர்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மாணவியருக்கு, தமிழ் பாடத்தில் 'விருந்து போற்றுதல்' என்ற தலைப்பு உள்ளது. அதில், தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும், இருக்க இடமும் கொடுத்து பாராட்டுவதே விருந்தோம்பல் என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருந்தினர் என்றால் உறவினர் என இக்காலத்தில் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறாகும். முன்பின் அறியாத புதியவர்களுக்கு விருந்தினர் என பெயர். விருந்து புதுமை என தொல்காப்பியர் கூறியுள்ளார்.
விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவர் இல்லறவியலில் படைத்திருக்கிறார். முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என திருவள்ளுவர் வலியுறுத்தினார்.
விருந்தினரை போற்றுதல் இல்லற கடமையாக உள்ளது. இது சிறந்த பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு தமிழருக்கு உண்டு.
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடம் உள்ளது. தலை வாழை இலையில், விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாக கருதப்படுகிறது. வாழை இலையின் மருத்துவ பயன்களை அறிந்துள்ளனர்.
தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிவர். உண்பவரின் இடப்பக்கம், வாழை இலையின் குறுகலான பகுதியும், வலது பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வர வேண்டும்.
ஏனெனில் வலது கையால் உணவு உண்ணும் பழக்கம் உடையவர்கள், இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான சிறு உணவு வகைகளும், வலது ஓரத்தில், காய்கறி, கிரை கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகள், நடுவில் சோறும் வைத்து உண்ண வசதியாக பரிமாறுவர்.
உண்பவர் மனம் அறிந்து அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளை பறிவுடன் பரிமாறுவார்கள். எனவே, தமிழர் பண்பாட்டை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பாரம்பரிய உணவு வகைகளை, மாணவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப வீடுகளில் தயார் செய்து கொண்டு வந்து, வாழை இலையில் சக மாணவியருக்கு விருந்து வைத்து மகிழ்ந்தனர்.
இவ்வாறு, கூறினர்.