தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளிகளுக்கு இடையே பேண்ட் இசை போட்டி

பள்ளிகளுக்கு இடையே பேண்ட் இசை போட்டி

பள்ளிகளுக்கு இடையே பேண்ட் இசை போட்டி


UPDATED : நவ 20, 2026 05:34 PM

ADDED : நவ 20, 2026 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 05:34 PM ADDED : நவ 20, 2026 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளிகளுக்கு இடையிலான பேண்ட் இசை போட்டிகள் நடந்தன.

திருப்பூர், கோவை கல்வி மாவட்டங்களில் இருந்து, 14 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

சீருடை அணிந்த மாணவ, மாணவியர் பேண்ட் இசைக்கருவிகளை வாசித்தவாறு பரேடு செய்தனர். பேண்ட் மாஸ்டர் சீனிவாசன், தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி., அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் நடுவர்களாக இருந்து, போட்டிகளை நடத்தினர்.

திருப்பூர் கல்வி மாவட்டத்தில் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், ஹோலி ஈடம் மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது. கோவை கல்வி மாவட்டத்தில் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், பேப்டிஸ்டி பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில், திருப்பூர் கல்வி மாவட்டத்தில், செயின்ட் மேரிஸ் பள்ளி முதலிடத்தையும், ஏ.வி.பி., பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன. கோவை கல்வி மாவட்ட போட்டியில், கோவை பிஷப் பிரான்சிஸ் பள்ளி முதலிடத்தையும், வித்ய விகாஷினி பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன.

மாணவிகளுக்கான போட்டியில் நிர்மலா பள்ளி முதலிடத்தையும், காந்திமாநகர் ஏ.வி.பி., பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றது.

கல்லூரியில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் ஜெய பாண்டியன் வரவேற்றார். இசை ஆசிரியர் சீனிவாசன், என்.சி.சி., அலுவலர் ஸ்ரீதர், காரமடை சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us