UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 10:58 PM
அ நிறம் | அளவு
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு–திருவனந்தபுரம் வடக்கு இடையே போத்தனுார் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, பெங்களூரில் இருந்து நாளை மாலை 4:40க்கு புறப்படும் ரயில்(06575) மறுநாள் காலை 10:30க்கு திருவனந்தபுரம் அடைகிறது.
திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 7ம் தேதி மதியம் 12:40க்கு புறப்படும் ரயில்(06576) மறுநாள் காலை 6:00க்கு பெங்களூரு அடைகிறது. ஒயிட்பீல்டு, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, கொல்லம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும் என, தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
