/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடிப்பூரத்தில் சாரதாம்பாளுக்கு வளையல் அலங்காரம்
/
ஆடிப்பூரத்தில் சாரதாம்பாளுக்கு வளையல் அலங்காரம்
ADDED : ஜூலை 28, 2025 09:57 PM
கோவை; ஆடிப்பூர நன்நாளான நேற்று, கோவை சாரதாம்பாள் கோவிலில் அம்பாளுக்கு 1.25 லட்சம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவாடிப்பூரம் என்பது ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் வரும்பண்டிகையாகும். இது ஆண்டாள் அவதரித்த நாளாகும். இந்நாளையொட்டி,சாரதாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.
நேற்று அதிகாலை அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கோவில் முழுக்க 1.25 லட்சம் கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்து தங்கள் வளையல்களையும், மஞ்சள் குங்குமத்தை அம்பாளுக்கு சமர்ப்பித்தனர்.
சலிவன் வீதியிலுள்ள வேணுகோபால சுவாமி கோவிலில், பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சியருளினார். ஆண்டாள் அருளி பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.