/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்ணாரியம்மன் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
பண்ணாரியம்மன் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஆக 08, 2025 09:14 PM

கோவை; மாணவர்களிடையே தொழில் வளர்ச்சி மற்றும் புதுமைகளை வளர்க்கும் நோக்கில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் கம்பா இன் கார்ப்பரேசன் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
துவக்க நிகழ்வாக,கம்பா தலைமை நிர்வாக அதிகாரி ஜெகன் தலைமையில் மாணவர்களுக்கு புத்தாக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த அமர்வில், தொழில் பாதைகள், எதிர்பார்ப்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் பற்றிய, ஆழமான நுண்ணறிவு விளக்கம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். எதிர்வரும் காலங்களில், கம்பா இன் கார்ப்பரேசன் மற்றும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியில், ஒரு சிறந்த திறன் மையம் மற்றும் ஒரு தொழில் துவக்க மையம் நிறுவப்படவுள்ளது.