/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
ADDED : ஆக 20, 2025 09:54 PM

அன்னூர்; அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ஓட்டல், பேக்கரி, மளிகை மற்றும் பெட்டி கடைகளில் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று பேரூராட்சி துப்புரவு அலுவலர் ராஜ்குமார் தலைமையில், மேற்பார்வையாளர்கள் பிரதீப், முருகேசன் உள்ளிட்டோர் பழைய பஸ் ஸ்டாண்ட், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் மெயின் ரோட்டில், ஹோட்டல் மளிகை உள்ளிட்ட 27 கடைகளில் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட ஒன்பது கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டாவது முறை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் இரண்டு மடங்காக அபராதம் விதிக்கப்படும். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

