sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தில் 5வது சுற்று நீர் திறக்க ஆலோசனை! ஜூலை 5 வரை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தல்

/

பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தில் 5வது சுற்று நீர் திறக்க ஆலோசனை! ஜூலை 5 வரை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தல்

பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தில் 5வது சுற்று நீர் திறக்க ஆலோசனை! ஜூலை 5 வரை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தல்

பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தில் 5வது சுற்று நீர் திறக்க ஆலோசனை! ஜூலை 5 வரை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தல்


ADDED : ஜூன் 04, 2025 08:49 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 08:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தில், ஐந்தாவது சுற்று தண்ணீர் திறப்பு உள்ளிட்டவை குறித்து, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஜூலை 5ம் தேதி வரை நீர் திறப்பை நீட்டிக்க வேண்டுமென, வலியுறுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

நடப்பாண்டு, பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், பெருவாரிப்பள்ளம், துாணக்கடவு வழியாக சர்க்கார்பதிக்கு நீர் திறக்கப்பட்டு, அங்கு மின் உற்பத்தி செய்து, காண்டூர் கால்வாய் வழியாக வெளியேறும் நீர், திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அணையில் நீர் இருப்பு வைத்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஜன., 29ம் தேதி திறக்கப்பட்டது. முதல் சுற்று தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், கடந்த பிப்., மாதம் சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்தில், ஜெனரேட்டர் பழுது ஏற்பட்டதால், காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மார்ச் மாதம் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த மாதம், 4வது சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு பாசனத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஐந்தாவது சுற்றுக்கு தண்ணீர் வழங்குவது மற்றும், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் பழுது ஏற்பட்ட போது தண்ணீர் நிறுத்தப்பட்டதை ஈடு செய்ய வலியுறுத்தி, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவினர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், திட்டக்குழு உறுப்பினர்கள், பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன் மற்றும் அதிகாரிகளிடம் தண்ணீர் திறப்பு குறித்து பேச்சு நடத்தினர்.

திட்டக்குழு தலைவர் கூறியதாவது:

கடந்த பிப்., மாதம் சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால், பாசனத்துக்கு பெறப்பட்ட தண்ணீர், வரும், 13ம் தேதிக்குள் பாய்ச்ச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, பழுது ஏற்பட்ட போது நீர் நிறுத்தப்பட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில், வரும் ஜூலை 5ம் தேதி வரை நீர் திறப்பை நீட்டிக்க வேண்டும். இதற்கான அரசாணை பெற அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

மூன்றாம் மண்டல பாசனத்தில் கடுமையான வறட்சி, வெயிலின் தாக்கம் காரணமாக முதல் மூன்று சுற்றுகளில் தண்ணீர் கூடுதலாக எடுக்க நேரிட்டது. அரசாணையில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் எடுக்க வேண்டும் என்பதால், ஐந்தாவது சுற்றில் ஐந்து நாட்கள் தண்ணீர் பாயும் மடைகளுக்கு, மூன்று நாட்களும்; ஏழு நாட்கள் பாயும் மடைகளுக்கு, நான்கு நாட்களும் தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

நான்காவது சுற்று தண்ணீர் வரும், 20ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின், நீர் நிறுத்தம் செய்யப்படாமல், தொடர்ந்து ஐந்தாவது சுற்று தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us