தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/‘டாஸ்மாக்’ கடைகளில் ‘பார்’ புதிய விதிகள் வெளியீடு

‘டாஸ்மாக்’ கடைகளில் ‘பார்’ புதிய விதிகள் வெளியீடு

‘டாஸ்மாக்’ கடைகளில் ‘பார்’ புதிய விதிகள் வெளியீடு


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 11:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘மலைவாழ் மக்கள் வசிக்கும் மலைப் பகுதிகளில், ‘பார்’ எனப்படும் மதுக்கூடங்கள் திறக்கக் கூடாது’ என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், டாஸ்மாக் மது கடைகளை ஒட்டி, மதுக்கூடங்கள் அமைப்பதற்கான புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:

 டாஸ்மாக் கடையை ஒட்டிய இடம் அல்லது கடையில் இருந்து, 100 மீட்டருக்குள் மதுக்கூடம் இருக்க வேண்டும்

 ஒப்பந்தம் வழங்குவதற்கான அடிப்படை விலையை, டாஸ்மாக் முடிவு செய்து, மது விலக்கு ஆயத்தீர்வை துறை ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும்

 வசூலிக்கப்படும் தொகையில், ஒரு சதவீதத்தை டாஸ்மாக் எடுத்துக் கொண்டு, மீதியை அரசுக்கு செலுத்த வேண்டும்

 மாநகராட்சி, நகராட்சிகளில் வழிபாட்டு தலம், கல்வி நிறுவனங்களில் இருந்து, 50 மீட்டருக்குள், மற்ற பகுதிகளில், 100 மீட்டருக்குள் மதுக்கூடம் அமைக்கக் கூடாது

 ஹோட்டல் வளாகத்தில் மதுக்கூடம் அமைக்கக் கூடாது. மலைவாழ் மக்கள் வசிக்கும், வேலுார், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், மலைப் பகுதிகளில் மதுக்கூடங்கள் திறக்கக் கூடாது

 குறைந்தது, 20 சதுர மீட்டர் இடம் இருக்க வேண்டும்.

இவ்வாறு, அரசு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us