/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாயில் குளித்தவர் நீரில் மூழ்கி இறப்பு
/
கால்வாயில் குளித்தவர் நீரில் மூழ்கி இறப்பு
ADDED : மார் 13, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம் : நெகமம், ஏ.நாகூர் பி.ஏ.பி., கால்வாயில் குளித்த இளைஞர், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கரூரை சேர்ந்தவர் நவநீதன், 18, கூலி தொழிலாளி. இவர், புதுப்பாளையம் பகுதியில் தென்னை மரத்தில், தேங்காய் பறிக்கும் வேலை வேலைக்கு செல்கிறார்.
இவர், ஏ.நாகூர் பகுதியில் உள்ள பி.ஏ.பி., கால்வாயில் குளிக்க சென்றார். அப்போது, கால்வாய் நீரில் இருந்து வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கினார். இவரது உடல் ஏ.நாகூரில் உள்ள தனியார் தோட்டத்தின் அருகே, கால்வாயில் மிதப்பதை கண்ட அப்பகுதியினர், நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இறந்தது நவநீதன் என்பதை உறுதி செய்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

