ADDED : அக் 08, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்தவர் மயிலாத்தாள், 35, மளிகைக் கடையில் வேலை பார்க்கிறார். இவரது கணவர் விஜயகாந்த், 42. வெல்டிங் வேலை செய்து வருகிறார்.
கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். விஜயகாந்த், மயிலாத்தாளை தாக்கியதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த 6ம் தேதி இரவு, மயிலாத்தாள் வன பத்ரகாளியம்மன் சாலையில் நடந்து வரும் போது, விஜயகாந்த் வழிமறித்து டிபன் பாக்ஸால் தாக்கினார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் மீட்டு மயிலாத்தாளை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, மேட்டுப்பாளையம் போலீசார் விஜயகாந்த்தை கைது செய்தனர்.