/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எட்., தரவரிசைப்பட்டியல் இன்று வெளியீடு
/
பி.எட்., தரவரிசைப்பட்டியல் இன்று வெளியீடு
ADDED : ஜூலை 30, 2025 09:26 PM
கோவை; பி.எட்., ஒற்றை சாளர முறையிலான இணையவழிக் கலந்தாய்வு வரும், 4ம் தேதி நடக்க உள்ளது.
தமிழகத்தில் ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளில், 900 மற்றும், 14 அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரிகளில், 1,140 என, 21 கல்லூரிகளில், 2,040 பி.எட் இடங்கள் உள்ளன.
இவற்றுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன், 20 முதல், ஜூலை, 21ம் தேதியுடன் நிறைவடைந்தது. மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
இதையடுத்து, ஆக., 4 முதல் ஆக., 9ம் தேதி வரை ஆன்லைன் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகள் மற்றும் படிப்பினை தேர்வு செய்யலாம். ஆக., 13ம் தேதி மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு, ஆணை வழங்கப்படும்.
ஆக., 14 முதல், ஆக., 19ம் தேதிக்குள் ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில் மாணவர்கள் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக., 20ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்க உள்ளன.