/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறந்த வாடிக்கையாளர் அனுபவ விருது கீர்த்திலால்ஸ் பெற்றது
/
சிறந்த வாடிக்கையாளர் அனுபவ விருது கீர்த்திலால்ஸ் பெற்றது
சிறந்த வாடிக்கையாளர் அனுபவ விருது கீர்த்திலால்ஸ் பெற்றது
சிறந்த வாடிக்கையாளர் அனுபவ விருது கீர்த்திலால்ஸ் பெற்றது
ADDED : ஜன 11, 2024 12:24 AM

கோவை : மும்பையில், சமீபத்தில் நடைபெற்ற ரீட்டெயில் ஜுவல்லர் எம்.டி., மற்றும் சி.இ.ஓ., விருது வழங்கும் விழாவில், கீர்த்திலால்ஸ் பிராண்டுக்கு, 'ஆண்டின் மிகச்சிறந்த வாடிக்கையாளர் அனுபவம்' என்ற மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதை, மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டம் வென்ற ஜோயா அப்ரோஸ் வழங்கினார். கீர்த்திலால்ஸ் சார்பில், அதன் இணை துணைத்தலைவர் ரகுநாத் இவ்விருதை பெற்றுக்கொண்டார்.
கீர்த்திலால்ஸ் இணை துணைத்தலைவர் ரகுநாத் பேசுகையில், '' தரம் மற்றும் சேவையின் மூலம், வாடிக்கையாளர்களோடு நெருங்கிய பிணைப்பை, கீர்த்திலால்ஸ் கொண்டுள்ளது. வாடிக்கையாளர் நல்லுறவுக்கான கீர்த்திலால்சின் முழுமையான அணுகுமுறை, புத்தாக்க தீர்வுகள், மாறிவரும் நுகர்வோர் விருப்பங்கள் மீது, ஆழமான புரிதல் ஆகியவற்றை இவ்விருது காட்டுகிறது,'' என்றார்.