/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை கால்பந்து போட்டி; ரத்தினம் கல்லுாரி அணி அபார வெற்றி
/
பாரதியார் பல்கலை கால்பந்து போட்டி; ரத்தினம் கல்லுாரி அணி அபார வெற்றி
பாரதியார் பல்கலை கால்பந்து போட்டி; ரத்தினம் கல்லுாரி அணி அபார வெற்றி
பாரதியார் பல்கலை கால்பந்து போட்டி; ரத்தினம் கல்லுாரி அணி அபார வெற்றி
ADDED : டிச 17, 2024 11:56 PM
கோவை; பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில், ரத்தினம் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கால்பந்து, பாக்சிங், நீச்சல் போட்டிகள், பெண்களுக்கான நீச்சல் போட்டி, பல்கலை மைதானத்தில் நடந்தது.
ஆண்களுக்கான கால்பந்து போட்டியில், ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, பாரதியார் பல்கலை, பிஷப் அப்பாசாமி கல்லுாரி ஆகியன முதல் நான்கு இடங்களை பிடித்தன.
'பாக்சிங்' போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி, பொள்ளாச்சி, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி ஆகியன, முதல் நான்கு இடங்களை வென்றன.
ஆண்களுக்கான நீச்சல் போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி, வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்லுாரி, பாரதியார் பல்கலை, ஆர்.வி.எஸ்., கலை கல்லுாரி ஆகியனவும், பெண்களுக்கான போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி, ஈரோடு வெள்ளாளர் கல்லுாரி, பாரதியார் பல்கலை, ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி, குமரகுரு லிபரல் கலை கல்லுாரி ஆகியன, முதல் ஐந்து இடங்களை பிடித்தன. வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.