/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடுப்பில் பைக் மோதல்; விபத்தில் ஒருவர் பலி
/
தடுப்பில் பைக் மோதல்; விபத்தில் ஒருவர் பலி
ADDED : நவ 25, 2024 10:35 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, உடுமலை ரோட்டில் தடுப்பு கம்பியில் மோதி பைக் விபத்துக்குள்ளானதில், ஒருவர் இறந்தார்.
பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத், 28. இவர், கருமாபுரத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, 21, என்பவருடன் நேற்றுமுன்தினம் இரவு, உடுமலை ரோட்டில் பைக்கில் சென்றார். பைக்கை, பிரசாத் ஓட்டினார். சின்னாம்பாளையம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த பைக், சர்வீஸ் ரோடு தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இருவருக்கும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர், பிரசாத்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். திருமூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.