/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்யசாய் சேவா சமிதியில் 23ல் பிறந்தநாள் விழா
/
சத்யசாய் சேவா சமிதியில் 23ல் பிறந்தநாள் விழா
ADDED : நவ 18, 2024 10:45 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சத்யசாய் சேவா சமிதியில், வரும், 23ம் தேதி பகவான் சத்யசாய் பாபா, 99வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
பொள்ளாச்சி சத்யசாய் சேவா சமிதியில், சத்யசாய் பாபாவின்,99வது பிறந்த நாள் விழா நேற்றுமுன்தினம் காலை, ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தன பூஜையுடன் துவங்கியது. கொடியேறம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, நேற்று மாலை, 5:30 மணிக்கு சிறப்பு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு, 7:00 மணிக்கு மங்கள ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 19ம் தேதி மாலை, சிறப்பு இலவச ேஹாமியோபதி மருத்துவ முகாம், திருவிளக்கு வழிபாடு, சாய்பஜன் நடக்கிறது.
வரும், 20ம் தேதி மாலை, சிறப்பு சொற்பொழிவு, அமிர்த கலசம் வழங்குதல், புத்தாடை வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 21ம் தேதி மாலை, வேதபாராயணம், சிறப்பு சாய் பஜன்; 22ம் தேதி காலை, ருத்ரம் வேதபாராயணம், மாலையில் திருப்புகழ் பாராயணம் நடக்கிறது.
வரும், 23ம் தேதி காலை, ஓம்காரம், சுப்ரபாதம், நாகசங்கீர்த்தனம், சாய் காயத்ரி மந்தர பாராயணம், சுயம்வர பார்வதி கலா ேஹாமம், சந்தான கோபால ேஹாமம் நடக்கிறது. மதியம் சிறப்பு நாராயண சேவை, மாலை பாலவிகாஸ் கலை நிகழ்ச்சிகள், வில்லுப்பாட்டு, மீனாட்சி திருக்கல்யாணம், இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.