/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா' ரத்து செய்ய கோரி பா.ஜ.,வினர் மனு
/
'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா' ரத்து செய்ய கோரி பா.ஜ.,வினர் மனு
'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா' ரத்து செய்ய கோரி பா.ஜ.,வினர் மனு
'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா' ரத்து செய்ய கோரி பா.ஜ.,வினர் மனு
ADDED : டிச 27, 2024 11:00 PM

வால்பாறை, ; சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.,வினர், மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம் மனு கொடுத்தனர்.
வால்பாறை பா.ஜ., மண்டல் தலைவர் பாலாஜி தலைமையில், மண்டல் பார்வையாளர் தங்கவேலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையிடம் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், தமிழக வனச்சட்டம், தமிழக தனியார் வனச்சட்டம்,வேட்டை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு வனசட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில், தற்போது, நீர் ஆதாரங்களின் முழுபயனை அடையவும், நீரின்றி வறண்டு கிடக்கும் நிலபரப்பிற்கு, இங்குள்ள நீரீனை கொண்டு சென்று பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களை முன்னிருத்தி, 'சுற்றுச்சூழல் 'உணர் திறன் மசோதா' வரைவு அறிக்கை விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 10 கி.மீ., துாரம் வரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்த தமிழக அரசின் வனத்துறை முதன்மை அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வால்பாறை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்படவுள்ள இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்து, மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, ''இந்த பிரச்னை மத்திய அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்வதோடு, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து பிரச்னை குறித்து பேசுகிறேன்.
வால்பாறை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், 'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா' வரைவு அறிக்கை குறித்து துறை அதிகாரிகளிடமும் பேசி விரைவில் நல்ல தீர்வு காணப்படும்,' என்றார்.