சமூக ஊடகத்தில் கடவுளரை இழிவுபடுத்துவதா? இ.மு. புகார்
சமூக ஊடகத்தில் கடவுளரை இழிவுபடுத்துவதா? இ.மு. புகார்
ADDED : அக் 22, 2026 07:29 PM

அ நிறம் | அளவு
கோவை: சமூக வலைதளங்களில் இந்து கடவுளர் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணி நிர்வாகிகள் இன்று (அக்.,22) புகார் கொடுத்தனர்.
நிருபர்களிடம் கூறுகையில்,‘‘இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ரீல்ஸ் ஆகியவற்றில் சமீபகாலமாக, இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் வகையிலும், இந்து முன்னணி மற்றும் அதன் நிர்வாகிகளை கொச்சைப்படுத்தியும் அவதுாறு பரப்புகின்றனர். அவர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பதோடு, மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்,’’ என்றனர்.
செயற்குழு உறுப்பினர் தசரதன், கோட்ட செயலாளர் பாபா கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் பங்கேற்றனர்.
