/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழுக்கல் படிக்கட்டுகளில் பிளீச்சிங் பவுடர் துாவல்; 'தினமலர்' செய்தி எதிரொலி
/
வழுக்கல் படிக்கட்டுகளில் பிளீச்சிங் பவுடர் துாவல்; 'தினமலர்' செய்தி எதிரொலி
வழுக்கல் படிக்கட்டுகளில் பிளீச்சிங் பவுடர் துாவல்; 'தினமலர்' செய்தி எதிரொலி
வழுக்கல் படிக்கட்டுகளில் பிளீச்சிங் பவுடர் துாவல்; 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : ஜூன் 23, 2025 10:39 PM

வால்பாறை; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறையில் வழுக்கல் நிறைந்த நடைபாதை படிக்கட்டுகளில், பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டது.
வால்பாறையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென்மேற்குப் பருவமழை பெய்கிறது. வால்பாறை நகரின் பல்வேறு இடங்களில் மக்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகள் வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது.
இதனால், குழந்தைகள் முதல் முதியவர் வரை நடைபாதையில் நடந்து செல்லும் போது, கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் நிலையில், பல்வேறு இடங்களில் கால்வாய் வசதி இல்லாததால், மழை நீர் நடைபாதை வழியாக செல்கிறது. இதனால் மக்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகள் வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது.
நகராட்சி சார்பில், வால்பாறை நகரில் வழுக்கல் நிறைந்த அனைத்துப்பகுதிகளிலும் பிளீச்சிங் பவுடர் துாவி சுத்தம் செய்ய வேண்டும் என, 'தினமலர்' நாளிதழில் கடந்த, 18ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, நகராட்சி கமிஷனர் கணேசன், துப்புரவு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில், மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில், நகரில் முக்கிய இடங்களில், வழுக்கல் நிறைந்த படிக்கட்டுகளில், துாய்மை பணியாளர்கள் சுண்ணாம்பு கலந்த பிளீச்சிங் பவுடர் துாவினர். 'தினமலர்' செய்தி எதிரொலியால் பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.