நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே உள்ள ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த, நிறுவனர் தின விழாவில், ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தலைவர் தர்மலிங்கம் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். கல்லூரி டீன் மலர்விழி வரவேற்றார். முதல்வர் ஜெயபிரகாஷ், செயல் அலுவலர் பிரசன்னன், சக்தி குழுமத்தின் இயக்குனர் அசோகன், ஆகியோர் பங்கேற்றனர்.
என்.எஸ்.எஸ் மாணவர்கள், 78 யூனிட் ரத்தம் வழங்கினர்.