/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழையில் குருத்து அழுகல் நோய்! வேளாண் ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
/
வாழையில் குருத்து அழுகல் நோய்! வேளாண் ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
வாழையில் குருத்து அழுகல் நோய்! வேளாண் ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
வாழையில் குருத்து அழுகல் நோய்! வேளாண் ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
ADDED : மார் 15, 2024 12:11 AM
உடுமலை;'வாழையில் குருத்து அழுகல் நோய் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது' என, வேளாண் பல்கலை எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர காலநிலை அறிக்கை வெளியிட்டு வருகின்றன.
அதில் கூறியிருப்பதாவது:
வரும், 17ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 35 டிகிரி செல்சியஸ் முதல், 36 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 22 டிகிரி செல்சியஸ் முதல், 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.
காற்றின் ஈரப்பதம், 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 20 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. சராசரியாக, மணிக்கு, 8 முதல், 10 கி.மீ., வேகத்துக்கு காற்று வீசக்கூடும்.
அடுத்து வரும் நாட்களில், மேற்கு மண்டல பகுதிகளில், 6 முதல், 12 கி.மீ.,க்கு மேலாக காற்றுடன், வறண்ட வானிலை இருக்கும்.
பகல் மற்றும் இரவு நேரங்களில், வெப்பநிலை உயர்ந்து வருகிறது. அதே நேரம், காற்றின் ஈரப்பதம் குறைந்து வருகிறது.
வெப்பநிலை அதிகரித்து, ஈரப்பதம் குறைய வாய்ப்புள்ளதால், கரும்பில் இளங்குருத்துப்புழு வர வாய்ப்புள்ளது. இதற்கு, அடிக்கடி நீர் பாய்ச்சி, வயலை ஈரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
காற்றின் வேகம், 8 முதல், 10 கி.மீ., வரை காணப்படுவதால், 5 மாதங்களுக்கு மேலான வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்.
காலை மற்றும் மாலை நேர காற்றின் ஈரப்பதத்தில், மிகுந்த வேறுபாடு காணப்படுவதால், வாழையில் குருத்து அழுகல் நோய் தாக்க வாய்ப்புள்ளது.
இதை கட்டுப்படுத்த, பிளீச்சிங் பவுடர், 20 கிராம் அளவுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்; 10 நாள் இடைவெளியில் மற்றொரு முறை தெளிக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட விவசாயிகள், வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவுரைகளை பின்பற்றலாம்.

