/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றில் அடித்து சென்ற வாலிபர் உடல் மீட்பு
/
ஆற்றில் அடித்து சென்ற வாலிபர் உடல் மீட்பு
ADDED : ஆக 06, 2025 09:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அலநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சாபித், 26.
இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள வெள்ளியார் ஆற்றில் நீர் கரைபுரண்டு செல்வதை காண சென்றார்.
அப்போது, கால் தவறி ஆற்றில் விழுந்த சாபித், நீரில் அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் ஊர்மக்களின் உதவியுடன் தேடுதல் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை சாபித் உடல், கடூர்படி என்ற பகுதியில் உள்ள கரையோரம் கிடப்பது அப்பகுதி மக்கள் கண்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மண்ணார்க்காடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர்.