UPDATED : நவ 10, 2026 08:38 PM
ADDED : நவ 10, 2026 08:36 PM
அ நிறம் | அளவு
சூலூர்:
சூலூரில் பத்திர எழுத்தர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்தில், ஏராளமான பத்திர எழுத்தர்கள் பங்கேற்றனர்.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், ' தனியார் மயமாக்கலால், எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். ஆவணங்களை சரிபார்க்கும் முறையை மாற்றினால், சொத்தின் மீதான வில்லங்கங்கள் அதிகரிக்கும். ஏழை, எளிய மக்கள் தங்களது சொத்துக்களை பதிவு செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்' என்றனர்.
சூலூர் சங்க தலைவர் சாந்தி, செயலாளர் சுசீலா தேவி, பொருளாளர் ரேணுகாதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
