குடிநீர் எடுக்கும் பவானியில் குப்பை கொட்டும் அவலம்
குடிநீர் எடுக்கும் பவானியில் குப்பை கொட்டும் அவலம்
UPDATED : நவ 10, 2026 08:45 PM
ADDED : நவ 10, 2026 08:42 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து, 21 திட்டங்களுக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. இந்த ஆற்றுத் தண்ணீரை, பல லட்சம் மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் பெயரளவில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளது. நகரின் கழிவுநீர் பல இடங்களில், பவானி ஆற்றில் கலக்கிறது. கழிவுநீர் கலந்த தண்ணீரையே மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
மக்கள் பவானி ஆற்று பாலத்தின் இரு பக்கத்திலும், குப்பையை ஆற்று தண்ணீரில் கொட்டி வருகின்றனர். ஒரு பக்கம் நகரின் சாக்கடை கழிவுநீரும், மற்றொரு பக்கம் மக்கள் கொட்டும் குப்பையும் பவானி ஆற்றில் சங்கமம் ஆகிறது.
நகராட்சி நிர்வாகம், குப்பை கொட்டுவதை தடுப்பது எப்படி என்று யோசித்து வருகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், பொதுப்பணித்துறையும் இணைந்து, கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதற்கு தீர்வு கிடைக்கும்.
