/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தக கண்காட்சி துவங்கியாச்சு சிறப்பு தள்ளுபடியில் விற்பனை
/
புத்தக கண்காட்சி துவங்கியாச்சு சிறப்பு தள்ளுபடியில் விற்பனை
புத்தக கண்காட்சி துவங்கியாச்சு சிறப்பு தள்ளுபடியில் விற்பனை
புத்தக கண்காட்சி துவங்கியாச்சு சிறப்பு தள்ளுபடியில் விற்பனை
ADDED : ஏப் 23, 2025 11:21 PM

கோவை,; புதுடில்லி நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் கோவை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில், 39வது தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா, காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் எதிரில் நேற்று துவங்கியது; ஜூன், 23 வரை நடக்கிறது.
கோவை காட்டூர் போலீஸ் உதவி கமிஷனர் கணேஷ், புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொருளாளர் ரமணி தலைமை வகித்தார். புத்தக தினத்தை முன்னிட்டு, 30ம் தேதி வரை, புத்தகங்களுக்கு, 10 முதல் 30 சதவீதம் வரை; மே 1 முதல் கண்காட்சி இறுதி நாள் வரை, 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, திறனாய்வு, அரசியல், அறிவியல் உட்பட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் கல்வி நிறுவன நுாலகங்களுக்கு மொத்தமாக புத்தகங்கள் வாங்கும்போது சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய நட்புறவு கழக மாநில பொருளாளர் கோட்டியப்பன், எழுத்தாளர் புகழேந்தி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் குணசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

