/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவம் துவக்கம்
/
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவம் துவக்கம்
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவம் துவக்கம்
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவம் துவக்கம்
ADDED : ஏப் 07, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, 20ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இம்மாதம், 15ம் தேதி வரை தினமும் மாலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை பிரம்மோத்ஸவ விழா நடக்கிறது. விழாவின், 10 நாட்களும் திவ்ய பிரபந்த சேவா காலம் தினமும் மதியம், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடைபெறுகிறது.
நேற்று காலை நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் வைகுண்ட ஏகாதசி சேஷ வாகன கட்டளைதாரர்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.