ADDED : ஜூலை 24, 2025 08:44 PM
அ நிறம் | அளவு
கோவை; கோவை சூலுார் அருகே பாப்பம்பட்டி வீரமாத்தியம்மன் கோவிலை ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர கோரி, நிர்வாகம் சார்பில் விண்ணப்பித்தனர்.
இதற்கு கோவை, பாலசுந்தரம் ரோட்டிலுள்ள ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரி இந்திரா,54, லஞ்சம் கேட்டார். லஞ்ச பணம், 1.50 லட்சம் ரூபாயை வாங்கும் போது, கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர், ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
