/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பில்டு எக்ஸ்கான் 2024'கண்காட்சி மலர் வெளியீடு
/
'பில்டு எக்ஸ்கான் 2024'கண்காட்சி மலர் வெளியீடு
ADDED : மார் 15, 2024 12:39 AM

கோவை;கோவையில் வரும் நவம்பரில் நடைபெறும் பில்டு எக்ஸ்கான் 2024 கட்டட கட்டுமான பொருள் கண்காட்சி மலர் நேற்று வெளியிடப்பட்டது.
கோயமுத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க(காட்சியா)கட்டுமான பொருள் கண்காட்சி 'பில்டு எக்ஸ்கான் 2024' வரும் நவ.,22 ல் துவங்கி 24 வரை மூன்று நாட்களுக்கு கொடிசியா 'இ' ஹாலில் நடக்கிறது.
இக் கண்காட்சிக்கு முன்னதாக கண்காட்சி மலர் 'பில்டு எக்ஸ்கான் 2024' வெளியீட்டு விழா பீளமேடு விஜய் எலான்சா ஓட்டலில் நேற்று நடந்தது.
விழாவில் காட்சியா தலைவர் ரமேஷ்குமார் வரவேற்றார்.
குளோபஸ் எஸ்.கே.,நிறுவன சேர்மன் சிவக்குமார் கண்காட்சி மலரை வெளியிட காவேரி குரூப் ஆப் கம்பெனீஸ் சேர்மன் வினோத் சிங் ரத்தோர் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கண்காட்சி தலைவர் விஜயகுமார், காட்சியா செயலாளர் ராமலிங்கம்,பொருளாளர் ரவிக்குமார், காட்சியா நிர்வாகிகள் மற்றும் கோர்கமிட்டி உறுப்பினர்கள்,செயற்குழு மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொருளாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

