/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டடம் கையகப்படுத்துதல்; மறுபரிசீலனைக்கு கோரிக்கை
/
கட்டடம் கையகப்படுத்துதல்; மறுபரிசீலனைக்கு கோரிக்கை
கட்டடம் கையகப்படுத்துதல்; மறுபரிசீலனைக்கு கோரிக்கை
கட்டடம் கையகப்படுத்துதல்; மறுபரிசீலனைக்கு கோரிக்கை
ADDED : டிச 09, 2025 05:31 AM
அன்னூர்: பேரூராட்சி பகுதியில் கட்டடங்களை கையகப்படுத்துவதை, மறுபரிசீலனை செய்யும்படி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அன்னூர் பேரூராட்சி பகுதியில், நான்கு வழிச்சாலைக்காக, கையகப்படுத்தப்பட உள்ள கட்டட உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவோர் சார்பில், கோவை கலெக்டர், தமிழக முதல்வர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :
அன்னூர் பேரூராட்சி பகுதியில் இருபுறமும் தலா பத்தடி அளவு கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக தொழில் செய்து வரும் எங்கள் கடைகளின் பெரும் பகுதியை இழக்க நேரிடும். மீதி உள்ள இடத்தில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இதனால் கட்டட உரிமையாளர்கள், வாடகைக்கு இருப்போர், பணிபுரிவோர் என 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஓதிமலை சாலையிலிருந்து தர்மர் கோயில் வீதி, இட்டேரி வீதி வழியாக, நாகமாபுதூரில், அவிநாசி சாலையை இணைக்கும்படி சாலை விரிவாக்கம் செய்தால் அதிக கட்டடங்களை கையகப்படுத்த தேவையில்லை. நிலம் கையகப்படுத்த தேவையில்லை. பெரும்பாலானோருக்கு பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

