/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி
/
பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி
ADDED : டிச 09, 2025 05:32 AM

கருமத்தம்பட்டி: வாகராயம்பாளையம் அரசு பள்ளியில் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு, மாலை நேர சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, மாலை 6:30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன.
மாலையில் பசியால் தவிக்கும் மாணவ மாணவியருக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்த 15 ஆண்டுகளாக இங்கு செயல்பாட்டில் உள்ளது.
பெற்றோர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தலைமை ஆசிரியர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'வரும் மார்ச் வரை சிற்றுண்டி வழங்கப்படும். சுண்டல், சாத வகைகள் வழங்கப்படுகின்றன. சாப்பிட்ட பின், மாணவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதால், படிப்பில் கவனம் செலுத்துகின்றனர்.
தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்க்கின்றனர்' என்றனர்.

