sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரியம்மன் கோவிலில் எருதுகட்டு உற்சாகம்

/

மாரியம்மன் கோவிலில் எருதுகட்டு உற்சாகம்

மாரியம்மன் கோவிலில் எருதுகட்டு உற்சாகம்

மாரியம்மன் கோவிலில் எருதுகட்டு உற்சாகம்


ADDED : ஜூன் 27, 2025 11:16 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன், மாகாளியம்மன் திருக்கோவில் பூச்சாட்டு திருவிழாவில் எருதுகட்டு விழா நடந்தது.

இந்த விழாவையொட்டி கடந்த புதன்கிழமை திருக்கல்யாணம், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வான வேடிக்கை நடந்தது. வியாழக்கிழமை பொலி எருதுகள் பிடிக்க அம்மன் சன்னிதானத்தில் கயிறு மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாகாளியம்மன் கரகம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 3:00 மணிக்கு ஒயிலாட்டம், சிலம்பாட்டம் நடந்தது.

இரவு இடையர்பாளையம் அருள்மிகு மாகாளி அம்மன் கோவிலில் இருந்து பொலி எருதுகள் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு மாரியம்மன் கோவில் முன்பு எருதுகட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மஞ்சள் நீர் அம்மன் பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.






      Dinamalar
      Follow us