ADDED : ஜன 18, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, சுந்தராபுரம் அருகே எம்.ஜி.ஆர்., நகரில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ஹரேந்தர்குமார், 19, தனது, 14 வயது மனைவியுடன் வசித்து வந்தார். இரு நாட்களுக்கு முன், சமையல் செய்யும்போது சிறுமியின் சேலையில் தீப்பற்றியது.
படுகாயமடைந்த சிறுமி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுந்தராபுரம் போலீசார் ஹரேந்தர் குமாரிடம் விசாரணை நடத்தினர். சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கோவைக்கு ரயிலில் வந்தனர். அதற்குள்ளாக, நேற்று முன்தினம் இரவு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். இதனையறிந்த பெற்றோர், மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணையை தொடர்கின்றனர்.