/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் தானியங்கி கதவு மக்கர் கேள்விக்குறியானது பாதுகாப்பு
/
பஸ் தானியங்கி கதவு மக்கர் கேள்விக்குறியானது பாதுகாப்பு
பஸ் தானியங்கி கதவு மக்கர் கேள்விக்குறியானது பாதுகாப்பு
பஸ் தானியங்கி கதவு மக்கர் கேள்விக்குறியானது பாதுகாப்பு
ADDED : ஜூலை 17, 2025 09:39 PM
வால்பாறை; அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள் அடிக்கடி பழுதாவதால், பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், கோவை, பொள்ளாச்சி, பழநி, சேலம், திருப்பூர் மற்றும் எஸ்டேட் உள்ளிட்ட வழித்தடங்களில், 42 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த மே மாதம் முதல், ஏழு புதிய பஸ்கள் வால்பாறையில் இயக்கப்படுகின்றன.
அரசு உத்தரவுப்படி படியில் யாரும் தொங்கிய படி பயணம் செய்யாமல் இருக்கவும், ஓடும் பஸ்களில் பயணியர் அவசரகதியில் ஏறுவதால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், அனைத்து அரசு பஸ்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால், வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் சில பஸ்களில் கதவுகள் சரியாக மூடப்படாமலும், பழுதடைந்த நிலையில் இருப்பதாலும் பயணியருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சில பஸ்களில் கதவுகளின் கைப்பிடியை பிடித்து ஏறி, இறங்கும் போது, கதவு நகர்வதால், பயணியர் தடுமாறுகின்றனர்.
பயணியர் கூறுகையில், 'வால்பாறையில் கரடு, முரடான ரோட்டில் பஸ்களை இயக்கும் போது, தானியங்கி கதவுகள் திறந்த நிலையில் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பழுதடைந்த நிலையில் உள்ள தானியங்கி கதவுகளை உடனடியாக சரி செய்து, வழித்தடத்தில் இயக்க வேண்டும்,' என்றனர்.