/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்ட் முழுக்க 'பார்க்கிங்'; அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்
/
பஸ் ஸ்டாண்ட் முழுக்க 'பார்க்கிங்'; அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்
பஸ் ஸ்டாண்ட் முழுக்க 'பார்க்கிங்'; அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்
பஸ் ஸ்டாண்ட் முழுக்க 'பார்க்கிங்'; அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்
ADDED : ஜூலை 04, 2025 10:10 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களால், பஸ்களின் இயக்கம் பாதிக்கிறது.
பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவை, உடுமலை, திருப்பூர், பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில், பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், தினமும், பல்லாயிரக்கணக்கான மக்கள், பஸ் ஸ்டாண்டை பயன்படுத்துகின்றனர்.
பஸ்களின் இயக்கத்திற்கு ஏற்ப, அங்குமிங்கும் அவசரகதியில் மக்கள் நடந்து செல்கின்றனர். இதனிடையே பஸ் ஸ்டாண்டினுள், அத்துமீறி இயக்கப்படும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களால் மக்கள் பாதிக்கின்றனர். விபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதால், பஸ்களின் இயக்கமும் பாதிக்கிறது.
மக்கள் கூறியதாவது:
இரு பஸ் ஸ்டாண்டிலும், 'ரேக்' ஒட்டிய பகுதிகளில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. அங்குள்ள கடைக்காரர்களின் வாகனங்களை நினைத்த இடங்களில், 'பார்க்கிங்' செய்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, பயணியரை அழைத்துச் செல்வதற்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களின் இயக்கமும் அதிகரிக்கிறது. பஸ்களின் இயக்கத்திற்கு எதிராக இந்த வாகனங்கள் இயக்கப்படுவதால், மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.
அத்துமீறி பஸ் ஸ்டாண்டினுள் இயக்கப்படும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.