/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருப்பத்தில் நிறுத்தப்படும் பஸ்களால் காத்திருப்போருக்கு காத்திருக்கு ஆபத்து
/
திருப்பத்தில் நிறுத்தப்படும் பஸ்களால் காத்திருப்போருக்கு காத்திருக்கு ஆபத்து
திருப்பத்தில் நிறுத்தப்படும் பஸ்களால் காத்திருப்போருக்கு காத்திருக்கு ஆபத்து
திருப்பத்தில் நிறுத்தப்படும் பஸ்களால் காத்திருப்போருக்கு காத்திருக்கு ஆபத்து
ADDED : ஜன 08, 2026 05:09 AM

கோவை: கோவை லாலி ரோடு சந்திப்பில் மேம்பாலம் கட்டும் வரை தற்காலிக ஏற்பாடாக, ரவுண்டானா மற்றும் சாலைத்தீவுகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. கவுலி பிரவுன் ரோடு, காந்தி பார்க் ரோட்டில் வருவோர், கருப்பராயன் கோயில் பின்புறம் சுற்றிச் செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப் பட்டுள்ளது.
வாகனங்கள் திரும்பும் வளைவு பகுதியில், பயணிகள் காத்திருப்பதற்கு நிழற்குடை அமைக்கப்பட்டது. இது விபத்து அபாயத்தை ஏற்படுத்தும்; பஸ்கள் நிற்கும் சமயத்தில், மற்ற வாகனங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதா க, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. உடனே, பயணிகளுக்கான நிழற்குடை அகற்றப்பட்டது. 'நோ பார்க்கிங்' பலகை நடப்பட்டது. ஆனால், அன்றிலிருந்து இன்று வரை பஸ்களை அதே இடத்திலேயே நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர்.
பயணிகள் பாதுகாப்பின்றி, ரோட்டோரத்தில் திறந்தவெளியில் காத்திருக்கின்றனர். 'பீக் ஹவர்ஸ்' சமயத்தில் திருப்பத்தில் பஸ்கள் நிற்கும்போது, வேளாண் பல்கலை ரோடு, காந்தி பார்க் ரோட்டில் வாகனங்கள் தேங்குகின்றன. அதிவேகமாக வந்து திரும்பும் வாகனங்களால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன் போதுமான இடம் இருப்பதால், அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். திருப்பத்தில் பஸ்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

