/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஏற்க மறுத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜன 08, 2026 05:10 AM

கோவை: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஏற்க மறுத்து, தமிழ்நாடு வணிக வரித்துறை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வணிகவரித்துறை பணியாளர் சங்க நிர்வாகி பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் உதயகுமார் கோரிக்கைகளை விளக்கி பேசுகையில், ''பழைய ஓய்வூதியம் ஒன்றே எங்களின் இலக்காகும். தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஏற்க முடியாது.
தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும், 21 மாத கால ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், எங்ளது கோரிக்கைகளை ஏற்று, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்,'' என்றார்.
தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் இன்னாசி முத்து, முன்னாள் பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் பாண்டியராஜன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.