/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் தொகுப்பு வாங்கிக்கோங்க! மெகா போனில் கெஞ்சி ஊழியர்கள் அழைப்பு
/
பொங்கல் தொகுப்பு வாங்கிக்கோங்க! மெகா போனில் கெஞ்சி ஊழியர்கள் அழைப்பு
பொங்கல் தொகுப்பு வாங்கிக்கோங்க! மெகா போனில் கெஞ்சி ஊழியர்கள் அழைப்பு
பொங்கல் தொகுப்பு வாங்கிக்கோங்க! மெகா போனில் கெஞ்சி ஊழியர்கள் அழைப்பு
ADDED : ஜன 13, 2025 05:59 AM

கோவை; பொங்கல் தொகுப்பு வாங்க, ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கடைக்கு வராததால், வீதி வீதியாக சென்று கடை ஊழியர்கள், மெகா போன் வாயிலாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு, பொங்கல் தொகுப்பாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, பொங்கல் தொகுப்பில், 1000 ரூபாய் வழங்கப்பட மாட்டது என, அரசு தரப்பில் தெரிவித்தால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. அதனால் பொங்கல் தொகுப்பு டோக்கன் வாங்குவதில், மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல், ரேஷன்கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பணம் கொடுக்காததால் கார்டுதாரர்கள் பெரும்பாலும் பொங்கல் தொகுப்பு வாங்க ரேஷன் கடைக்கு செல்லவில்லை. டோக்கன் வாங்கியவர்கள் கூட செல்ல வில்லை. இதனால், 50 சதவீதம் கார்டுதார்கள் கூட, இன்னும் பொங்கல் தொகுப்பு வாங்கவில்லை.
அதனால் ரேஷன் கடை ஊழியர்கள், மெகா போனை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அறிவிப்பு செய்து, பொங்கல் தொகுப்பு வாங்க பொதுமக்களை அழைக்கின்றனர். வீட்டுக்கே சென்று பில் போட்டு, கொடுத்து விட்டு வருகின்றனர்.
ரேஷன்கடை ஊழியர்கள் கூறியதாவது:
பணம் கொடுக்காததால், பொங்கல் தொகுப்பு வாங்க மக்களுக்கு விருப்பம் இல்லை. ரேஷன்கடைக்கு பக்கத்தில் குடியிருப்பவர்கள் கூட, பொங்கல் தொகுப்பு வாங்கவில்லை.
பொங்கல் பண்டிகைக்கு முன், அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு கொடுத்து முடிக்க வேண்டும் என, அதிகாரிகள் அழுத்தம் தருகின்றனர். மெகா போனை கையில் கொடுத்து, வீதி வீதியாக போய் அறிவிக்குமாறு எங்களை கஷ்டப்படுத்துகின்றனர்.
பி.ஓ.எஸ்., மெஷினை துாக்கிக் கொண்டு, வீட்டுக்கே போய் பில் போட்டு, தொகுப்பை கொடுத்து விட்டு வருகிறோம். இலவச வேட்டி சேலையும் முழுமையாக வரவில்லை. அதுவும் பாதி பேருக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.