UPDATED : நவ 18, 2026 06:32 PM
ADDED : நவ 18, 2026 06:32 PM
வால்பாறை: வால்பாறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.
வால்பாறை எம்.எல்.ஏ., சுதாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை நகராட்சியில் பல கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட படகு இல்லம் மற்றும் நகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. காந்திசிலை அருகில் கண்ணாடிமாளிகை மற்றும் வணிகவளாகம் கட்டும் பணியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
மின்மயானம் அமைக்க டெண்டர் விடப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இது வரை பணிகள் துவங்கவில்லை. பல்வேறு எஸ்டேட்களில் சாலைகளை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும். வால்பாறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளை உடனடியாக துவங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
