தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


ADDED : நவ 18, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புகையிலைப் பொருட்கள்

பதுக்கியவர் சிறையிலடைப்பு

மதுக்கரை : சுந்தராபுரம் போலீசாருக்கு மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அவற்றை பதுக்கிய எம்.ஜி.ஆர்.நகரில் தங்கியுள்ள புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் ராஜ்குமாரை, 39 சிறையில் அடைத்தனர். 183.85 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

* சிங்காநல்லுார் போலீசார் புகையிலைப் பொருட்கள் பதுக்கிய மதுரை வண்டியூர் சவரிமுத்துவை, 55 கைது செய்தனர். 2.385 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொது இடங்களில் மது

குடித்த 10 பேர் கைது

கோவை: பொது இடங்களில் மது குடிப்பவர்களால் பல பிரச்னைகள் எழுவதாக புகார்கள் வந்தன. போலீசார் கண்காணித்து நேற்று ஒரே நாளில், மாநகர எல்லைக்குட்பட்ட 7 போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில் 10 பேரை கைது செய்து வழக்கு பதிந்தனர். இதில் 10 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us