/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் படை வீரர்களுக்கு தேர்தல் பணியாற்ற அழைப்பு
/
முன்னாள் படை வீரர்களுக்கு தேர்தல் பணியாற்ற அழைப்பு
முன்னாள் படை வீரர்களுக்கு தேர்தல் பணியாற்ற அழைப்பு
முன்னாள் படை வீரர்களுக்கு தேர்தல் பணியாற்ற அழைப்பு
ADDED : மார் 11, 2024 01:40 AM
கோவை;தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட, முன்னாள் படை வீரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் பணிக்கு, முன்னாள் படை வீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்த உள்ளனர். கோவை மாவட்டத்தைச்சேர்ந்த, 65 வயதுக்கு உட்பட்ட, உடல் ஆரோக்கியமான, விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள், படைவீரர் அடையாள அட்டை, படைப்பணி விபரச்சான்று,வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் கோவை மாவட்ட முன்னாள் படை வீரர் நலஉதவி இயக்குனர் அலுவலகத்தினை நேரில் அணுகி விருப்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இப்பணிக்கு அரசு விதிமுறைப்படி ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.